எலும்பு முறிவு ஏற்பட்டவுடன் செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை👍
இரத்தம் வராமல் இருப்பதற்கு ஒரு நூல் துணியை கிழித்து 4-5 விரல் அளவுக்கும் 4 -5 அடி நீளத்துக்கம் கிழித்து அதை தண்ணீரில் நனைத்து அடிப்பட்ட இடத்தில் சுத்தி கட்ட வேண்டும். அப்படி கட்டுறதுனால் இரத்த கட்டு அதிகமாக ஏற்படாது. இறுக்கமாக கட்டவும் கூடாது. மேலே லேசாக சுத்த வேண்டும்.மேலும் அந்த கட்டில் முடிந்த அளவுக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். அந்த இடத்தை ஈரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் எலும்பு கூட்டு அதாவது இரண்டு எலும்பு முறிதல் போன்றவை ஏற்பட்டால் உங்களுக்கு எலும்புகள் அங்கயும் இங்கயும் நகர்ந்துவிடும். நீங்கள் சிகிச்சைக்காக வரும்பொழுது கட்டாயமாக 2 அடி ஸ்கேல் கீழயும் மேலையும் வைத்து கட்டிவிட்டு ஒரு சிறு கட்டுபோட்டு வர வேண்டும். அந்த எலும்பை நகரவிடாமல்.
S.R .ஜெயதுரை BSC, BNYS, DVM,PGDYN
Comments
Post a Comment